ரோஜா இதழ் தரும் நன்மைகள்

ரோஜா இதழ்களில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சினையை தவிர்க்கலாம். ரோஜா இதழ்கள் சிலவற்றை ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். இரவு தூங்க செல்லும்போது அதனை பாலுடன் கலந்து பருகவும். காலையில் எழும்போது வயிறு இதமாக இருக்கும்.

தொடர்ந்து சில நாட்கள் ரோஜா இதழ்கள் கலந்த பால் பருகிவந்தால் மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம். சிலர் சிறுநீர் பாதையில் நோய் தொற்று பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவார்கள். ரோஜா இதழ்கள், பாக்டீரியா நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டவை.

யோனி அல்லது சிறுநீர் பாதையில் படிந்திருக்கும் பாக்டீரியாக்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி நோய் தொற்று பரவாமல் குணப்படுத்த உதவும். ரோஜா இதழ்களை கொதிக்கும் நீரில் வேகவைத்து வடிகட்டி பருகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *