எப்போதெல்லாம் மேக்கப் போட கூடாது?

லேசர் முடி சிகிச்சைக்கு பிறகு உடனே மேக்கப் போடுவது நல்லதல்ல. சருமத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் 48 மணி நேரத்திற்கு மேக்கப் எதுவும் போடக் கூடாது. சரும அலர்ஜி கொண்டவர்கள் முற்றிலும் மேக்கப்பை தவிர்க்க வேண்டும். முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் கூடுமானவரை மேக்கப்பை தவிர்த்துவிடுவது நல்லது.

நீச்சல் குளத்திற்கு செல்லும்போது மேக்கப் போடக்கூடாது. ஏனெனில் நீச்சல் குளத்தில் உள்ள நீரில் குளோரின், அழுக்கு, பாக்டீரியாக்கள் கலந்திருக்கும். அவை மேக்கப்பில் கலந்து சருமத்திற்கு கேடுவிளைவிக்கும். சரும வீக்கம், அலர்ஜி போன்ற பாதிப்புகளும் உருவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *