பெண்கள் மேக்கப் செய்யும் போது கவனிக்கவேண்டியவை

மேக்கப் செய்வதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். அது சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிடம் இருந்து பாதுகாக்கும். ஒருவர் பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கை மற்றவர்கள் பயன் படுத்தக்கூடாது. மேக்கப் சாதனங்கள் வைத்திருக்கும் பேக்கை திறந்து வைக்கக்கூடாது.

அதற்குள் பாக்டீரியாக்கள் எளிதாக உள்ளே நுழைந்து சருமத்திற்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். மேக்கப் பிரஷ், ஸ்பாஞ்சுகளை தினமும் சுத்தம் செய்வது நல்லது. மேக்கப் சாதனங்களை பயன் படுத்துவதற்கு முன்பு கைகளை நன்றாக கழுவ வேண்டும். எண்ணெய் தன்மை கொண்ட மேக்கப் சாதனங்களை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *