இலங்கையில் பத்து வயது சிறுவனை தூக்கி நிலத்தில் அடித்த கொடூரன் கைது

இலங்கையில் பொகவந்தலாவ – சீனாகலை தோட்ட பகுதியில் பத்து வயது சிறுவனை தூக்கி நிலத்தில் அடித்ததாக சொல்லப்படும் நபரை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். சென்ற வெள்ளிக்கிழமை பொகவந்தலாவ பிரதேச பள்ளி ஒன்றில் தரம் 5ல் கல்வி பயிலும் இரண்டு மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பாடசாலை நிர்வாகம் சமரசம் செய்து இரண்டு மாணவர்களையும் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இந்த சம்பவத்தை மாணவன் தனது தந்தையிடம் சொல்லியிருக்கிறார் . இதை அடுத்து அத்திரமடைந்த தந்தை தாக்கிய மாணவனின் வீட்டுக்கு சென்று அந்த மாணவனை தூக்கி நிலத்தில் அடித்துள்ளார். இதில் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் தொடர்ந்தும் பொகவந்தலாவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸாரின் தொடக்க கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *