நடிகர் ஜெயம் ரவிக்கு இன்று பிறந்ததினம் ; குவிந்து வரும் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவில் 2003 ம் ஆண்டு வெளியான ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டார் ஜெயம் ரவி. இந்த திரைப்படத்தை அவரது தந்தையும் படத்தொகுப்பாளருமான மோகன் தயாரிக்க அதை இவரது அண்ணன் இயக்குனர் ராஜா இயக்கியிருந்தார். பின்னர் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஜெயம்ரவி செப்டம்பர் 10 ம் தேதியான இன்று தனது 40வது பிறந்தநாளை குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் ஒன்றுகூடி வாழ்த்துக்களை கூறிக்கொண்டு காமன் டிபி-யை வெளியிட்டும் சிறப்பித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *