பள்ளிக்கல்வி குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழு : தமிழக அரசு உத்தரவு

சென்னை,

இந்தியாவில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு திமுக உட்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்’ புதிய கல்விக் கொள்கையை படிப்படியாக செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது கவலையளிக்கிறது என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய கல்வி கொள்ளையில், இடம் பெற்றுள்ள மும்மொழி திட்டத்தை ஏற்க முடியாது என்றும் மும்மொழி கொள்கையை அமல்படுத்தமாட்டோம் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழு பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் கல்வியாளர்கள், அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *