களக்காடு அருகே ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

திருச்செந்தூர்:

களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி பகுதியை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 24). இவருக்கும் வள்ளியூர் அருகே உள்ள ஆ.திருமலாபுரத்தை சேர்ந்த பிரியங்கா (22) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுடலைமுத்து தனது மனைவி மற்றும் தாயார் சந்திரகனியுடன் வசித்து வந்தார்.

பணகுடி அருகே உள்ள தண்டையார்குளத்தில் உள்ள ஒரு கடையில் ஊழியராக பணி புரிந்து வந்தார். அவரது தாயார் சந்திரகனிக்கும் சரியாக காது கேட்காது. இதனால் சுடலைமுத்துக்கும், சந்திரகனிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அதுபோல கடந்த 30-ந் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மனவேதனை அடைந்த சுடலைமுத்து வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கினார். அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *