மோலிவுட் சினிமாவின் மெகா ஸ்டார் மம்முட்டிக்கு இன்று பிறந்ததினம்

மலையாள திரைத்துறையில் தனது ஈடு இணையற்ற நடிப்பின் மூலம் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் மெகாஸ்டார் மம்முட்டி. இவர் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேலாக 400க்கும் அதிகமான திரைப்படங்களில் பல மொழிகளில் நடித்து இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கி கொண்டி இருக்கிறார். கடந்த 1991ல் மௌனம் சம்மதம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இவர் மறுமலர்ச்சி, கார்மேகம், ஆனந்தம், தளபதி,அழகன், பேரன்பு உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்தார். இந்நிலையில் செப்டம்பர் 7 ம் தேதியான இன்று மம்முட்டி தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஒன்றுகூடி இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *