ஆகஸ்ட் 14 : இன்றைய தினத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

1040 – இசுக்காட்லாந்து மன்னன் முதலாம் டங்கன் அவரது எதிராளி மக்பெத்துடனான போரில் கொல்லப்பட்டான். மக்பெத் மன்னராக முடி சூடினான்.

1385 – அல்சுபரோட்டா சமரில் போர்த்துக்கீசப் படையினர் முதலாம் ஜான் மன்னர் தலைமையில் காஸ்டில் படைகளைத் தோற்கடித்தனர்.

1480 – இத்தாலியின் தெற்கே ஒத்ராந்தோ நகரில் இசுலாமுக்கு மதம் மாற மறுத்த 800 கிறித்தவர்கள் உதுமானியர்களால் கழுத்து துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் பின்னர் திருச்சபையினால் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.

1592 – போக்லாந்து தீவுகளை முதன் முதலாக ஜான் ட்ஃபேவிசு என்ற ஆங்கிலேயர் கண்டார்.

1791 – செயிண்ட் டொமிங்கில் தோட்டப்பகுதி அடிமைகள் வூடூ சடங்கை நடத்தினர். இது எயித்தியப் புரட்சிக்கு வழிவகுத்தது.

1814 – சுவீடன்–நோர்வே போரை முடிவுக்குக் கொண்டு வந்த அமைதி ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *