புதிய வெரைட்டியாக இனிப்பு மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி

இப்போது இனிப்பு மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்

இதற்கு தேவைப்படும் பொருள்கள்:
மாங்காய் – 1, மிளகாய் தூள் – 1 மேஜைக்கரண்டி , காயத்தூள் – 1/4 மேஜைக்கரண்டி , வெந்தய தூள் – 1/2 மேஜைக்கரண்டி, அச்சு வெல்லம் – 1, உப்பு – 1/2 மேஜைக்கரண்டி

தாளிக்க தேவைப்படும் பொருள்கள்:
நல்லெண்ணெய் – 4 மேஜைக்கரண்டி , கடுகு – 1 தேக்கரண்டி

இதனை செய்யும்முறை :
முதலில் மாங்காயை நன்றாக கழுவி துடைத்து விட்டு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். பின்னர்  ஒரு அகன்ற பாத்திரத்தில் அச்சு வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும். இதில் அச்சுவெல்லம் கரைந்ததும் வடி கட்டி தனியே வைக்கவும். அதன் பிறகு அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். இதில் கடுகு வெடித்தவுடன் மாங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கி கொள்ளவும் . இப்போது மாங்காய் வெந்ததும் மிளகாய் தூள், காயத்தூள், வெந்தயத்தூள், உப்பு சேர்த்து கிளறி கொள்ளவும் . கடைசியில் வடி கட்டி வைத்துள்ள அச்சு வெல்லத்தண்ணீரை ஊற்றி நன்றாக கிளறி கொள்ளவும். பின்பு அச்சுவெல்லத் தண்ணீர் கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும் . அதன்பிறகு நன்கு ஆறியவுடன் ஒரு பாட்டிலில் எடுத்து வைத்து விடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *