கயானா,
இந்தியாவில் நடைபெறுமு் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போன்று வெஸ்ட் இண்டீஸில் கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இந்த ஆண்டுக்கான சீசன் வருகிற 18-ந்தேதி வெஸ்ட் இண்டீசில் தொடங்குகிறது.
6 அணிகள் பங்கேற்றும் இந்த தொடரில், ஜமைக்கா தல்லாவாஸ் அணியின் உதவி பயிற்சியாளராக பணியாற்றி வந்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் ராம்நரேஷ் சர்வான் தற்போது சொந்த காரணங்களுக்காக சி.பி.எல். போட்டியின் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தை விட்டு அவர் வெளியேறி இருக்கிறார். இதனால் இந்த சீசனில் இனி அவர் அணியுடன் இணைய வாய்ப்பில்லை. அவருக்கு பதிலாக வினோத் மகராஜ், ரையான் ஆஸ்டின் ஆகிய இருவர் உதவி பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ‘