பீட்ரூட் பன்னீர் சாலட்

தேவையான பொருட்கள் :

பீட்ரூட் – 200 கிராம்

பன்னீர் – 100 கிராம்
கோஸ் கேரட் – தலா 50 கிராம்
கெட்டி தயிர் – தேன்

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பீட்ரூட்டை தோல் நீக்கி வட்டமாக வெட்டி நீராவியில் 5 நிமிடங்கள் வேகவிட வேண்டும். பன்னீரை அதே அளவுக்கு மிக மெல்லியதாக வெட்டி பீட்ரூட் மேல் அடுக்கவும். ஓர் அடுக்கு பீட்ரூட் எனில் அடுத்த அடுக்கு பன்னீர் என்ற ரீதியில் இருக்க வேண்டும். கேரட் கோஸ் போன்றவற்றைச் சீவி அவற்றுடன் கெட்டி தயிர் தேன் சேர்த்துக் கலக்கி சாலட் மீது வைக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *