சமூக வலைதளங்களில் வெளியான மாஸ்டர் படத்தின் வெளியீடு தேதி

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

ஏப்ரல் மாதம் திரைக்கு வர இரந்த இந்த படம் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாஸ்டர் திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி பிரபல ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் போஸ்டர் ஒன்று பரவி வருகிறது.

இதுகுறித்து விசாரித்ததில், மாஸ்டர் என்னும் கொரியன் திரைப்படம் 2016ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த போஸ்டர்தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *