மாஸ்டர் பாடலுக்கு நடனமாடிய பிகில் பட நடிகை

பிகில் படத்திற்கு பிறது நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக குட்டி ஸ்டோரி பாடலுக்கு பல பிரபலங்களும் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டார்கள்.

அந்த வகையில், விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்து அணியில் நடித்த வினயா சேஷன் வெளிநாட்டில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோவை நடிகை வினயா சேஷன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *