ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழா : அயோத்தி முழுவதும் அகல் விளக்கேற்றி கொண்டாட்டம்

அயோத்தி,

அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்த விழாவில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். ராமர் கோவில் பூமி பூஜை நாளை நடைபெற இருப்பதால் அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில், இன்று அயோத்தி நகர் உட்பட மாநிலம் முழுதும் உள்ள மக்கள் லட்சக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றினர். விளக்குகளில் இருந்து வெளிப்பட்ட தீப ஒளியில் அயோத்தி நகரம் முழுவதும் ஜொலித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *