அயோத்தி,
ராமபிரான் பிறந்த இடமான உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
இதில் பிரதமர் மோடி கலந்து ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இந்நிலையில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் எப்படியிருக்கும் என்கிற மாதிரி புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த மாதிரி புகைப்படத்தில், கோவிலின் உச்சியில் காவிக்கொடி பறக்க, அழகான கட்டமைப்புகளுடன் ராமர் கோயில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.