டெல்லியில் இன்று மேலும் 674 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி,

இந்தியாவில் அதிக கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் உள்ள டெல்லியில்  இன்று மேலும் 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,39,156 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,033 ஆக உயர்ந்துள்ளது. இன்று 972 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *