சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

புதுடெல்லி,

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  ஐஏஎஸ் ஐபிஎஸ் உள்பட 829 இடங்களுக்கு  சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் நேர்காணல்  நடைபெற்றது. இதன் முடிவுகளை யுபிஎஸ்சி இன்று வெளியிட்டது.

இந்நிலையில் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில்,

சிவில் சர்வீசஸ் தேர்வை வெற்றிகரமாக முடித்த இளைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், பொது சேவையின் உற்சாகமான மற்றும் திருப்திகரமான வாழ்க்கை உங்களுக்காக காத்திருக்கிறது. அதற்காக என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *