மத்திய பெட்ரோலிய துறை அமைக்கருக்கு கொரோனா தொற்று

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அரசியல் பிரபலங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான், கர்நாடக முதல்-மந்திரி எடியுரப்பா மற்றும் முன்னாள் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித்துக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, தற்போது மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *