மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 7760 பேருக்கு கொரோனா தொற்று

பெங்களூரு,

இந்தியாவில் அதிகம் கொரோனா பாதிக்கபட்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மராட்டிய மாநிலத்தில், இன்று மேலும் 7,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,57,956 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 300 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,142 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 12,326 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *