குஜராத்தில் இன்று ஒரே நாளில் 1020 பேருக்கு கொரோனா பாதிப்பு

குஜராத்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், குஜராத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வகையில் குஜராத்தில் இன்று மேலும் 1,020 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 65,704 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளிரல் கொரோனா பாதிப்பால் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,534 ஆக அதிகரித்துள்ளது.

குஜராத் முழுவதும் இன்று ஒரேநாளில் 898 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 48,359 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *