சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் : 12 அரசுப்படையினர் படுகொலை

டமாஸ்கஸ்:

சிரியாவில் ரஷியா ஆதரவு பெற்ற அரசுப்படைக்கும், துருக்கி ஆதரவு பெற்ற  கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு பொர் நடைபெற்று வருகிறது. இதனால் அரசு ஆதரவு படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் லடஹியா மாகாணத்தில் நேற்று அரசு ஆதரவு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், அரசு ஆதரவு படையினர் 12 பேர், மற்றும் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் என மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், இரு தரப்பிலும் 20-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *