உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.84 கோடியாக அதிகரிப்பு

ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  1.84 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  6.96 லட்சமாக  உள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை  1.16 கோடியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *