இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறை : சுகாதார அமைச்சரை மாற்றிய பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் விவகாரத்தில் பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் சரியாக செயல்படவில்லை என கடும் விமர்சனம் எழுந்ததை தொர்ந்து, சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து வந்த ஜாபர் மிர்சா கடந்த புதன்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து டாக்டர் பைசல் சுல்தான் என்பவரை பிரதமர் இம்ரான்கான் பாகிஸ்தானின் புதிய சுகாதாரத்துறை மந்திரியாக நியமித்துள்ளார். பாகிஸ்தானில் 2 ஆண்டுகளில் 3-வது முறை சுகாதார துறை மந்திரி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *