இறுதி ஆண்டுக்கான் இறுதி செமஸ்டர் தேர்வு நடைபெறும் : மத்திய பல்கலைகழகம் அதிரடி அறிவிப்பு

திருவாரூர்,

கொரோனா பாதிப்புக்கு இடையில் பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகள் நடைபெறுமாக என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், இறுதியாண்டு  மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 

கொரோனா  காரணமாக தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த உத்தரவு திரும்பப்பெறப்படுவதாக கூறப்பட்டுள்ளது,  மேலும் அரியர் தேர்வுகளும் நடைபெறும் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழக அறிவித்துள்ளது.

ஆன்லைன் முறையில் தேர்வுகள் எழுத முடியாத மாணவர்கள்,  சகஜ நிலை திரும்பியபின் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் தேர்வுகளை எழுதி கொள்ளலாம் என்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *