ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து

சென்னை,

கொரோனா பாதிப்புக்கு இடையே அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பிரமாண்ட கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.

இந்நிலையில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட உள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், அயோத்தியில் நாளை ராமர் கோயில் பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள். ராமர் கோயில் கட்டுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டதற்கு மனமார்ந்த பாராட்டு என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *