அரைமணி நேரத்தில் 500 ரூபாய்க்கு இ-பாஸ் : ஆடியோ வெளியிட்ட நபர் அதிரடி கைது

கடலூர்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வெளியூருக்கு செல்பவர்களுக்கு இ-பாஸ் அவசியம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த இ-பாஸ் பெறுவதற்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் போலியாக இ-பாஸ் விநியோம் நடப்பது தெரியவந்துள்ளது. இதனை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடலூர் சாவடி பகுதியை சேர்ந்த ராஜாராமன் என்பவர் 500 ரூபாய்க்கு அரை மணிநேரத்தில் இ-பாஸ் எடுத்து தருவதாக ஆடியோ மெசேஜ் அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட  ராஜாராமனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *