வீரர்களுக்கு 5 முறை கொரோனா பரிசோதனை : வெறித்தனமான மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்

மும்பை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. வரும் செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி ஐக்கிய அரபு அமீரகம் அழைத்துச்செல்ல அணி நிர்வாகங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில்,  மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், தனது அணி வீரர்களை ஐக்கிய அரபு அமீரகம் அழைத்துச்செல்லும் முன் 5 முறை கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கூறுகையில்,

மும்பை இந்தியன்ஸ்  அணியில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் விரைவில் மும்பைக்கு வரவுள்ளார்கள். வந்தவுடன் அவர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பிறகு அவர்கள் பயிற்சியைத் தொடங்க அனுமதிக்கப்படுவார்கள்.

வீரர்களை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்வதற்கு முன்பு அனைத்து வீரர்களும் 5 முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்” உள்ளூர் வீரர்கள் பலரும் மும்பைக்கு வந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.   கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மட்டும்தான் அவர்கள் அறையை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *