ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகிய விவோ நிறுவனம்

கொரோனா பாதிப்புக்கு  இடையே காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 19-ந் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், இந்த போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் தொடருக்கு கடந்த சில வருடங்களாக விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வருகிறது. இதனால் வருடத்திற்கு சுமார் 400 கோடி ரூபாய் வரை பிசிசிஐ-க்கு வருமானம் கிடைக்கும்.

இந்நிலையில் லடாக் எல்லை பிரச்சினையில் இந்தியா சீனா மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, சீனா பெருட்களையும், சீன நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் செயல்பட்டு வந்த 59 சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

ஆனால் ஐபிஎல் தொடரில் சீன நிறுவனமான விவோ நிறுவனமே டைட்டில் ஸ்பாக்சராக தொடரும் என் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஐபிஎல் ஆட்சி மன்றக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் கடுப்பான ரசிகர்கள் டுவிட்டரில் ‘BoycottIPL’ என ஹேஸ்டேக் உருவாக்கி எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ விலகியுள்ளது. இது பிசிசிஐ-க்கு மிகப்பெரிய  அளவில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *