இந்த முறை இங்கிலாந்தை சமாளிக்குமா பாகிஸ்தான் : முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்

கொரோனா பாதிப்புக்கு இடையே இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது.

கொரோனா பாதிப்புக்கு இடையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதிய இங்கி்லாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி சீதோஷ்ணநிலையை பயன்படுத்தி ஆட்டத்தை தங்களது பக்கம் திரும்ப முயற்சிக்கும்

மேலும் பந்து ஸ்விங் ஆக சாதகமாக இருக்கும் என்பதால் இங்கிலாந்து மண்ணில் வெளிநாட்டு அணி தொடரை வென்றால் மிகச்சிறப்பானதாக பார்க்கப்படும். இங்கிலாந்து கடந்த 10 தொடர்களில் 8-ல் முதல் போட்டியை தோற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராகவும் இது நிகழ்ந்தது. இதனால் தொடரை வெற்றியோடு ஆரம்பிக்க இங்கிலாந்து முயற்சி செய்யும்.

பாகிஸ்தான் அணி கடந்த இரண்டு முறை இங்கிலாந்து சென்றிருந்தபோது தொடரை டிரா செய்துள்ளது. அந்த நம்பிக்கையில் களம் இறங்கும். பந்து வீச்சில் முகமது அப்பாஸ், ஷாஹீன் ஷா மற்றும் நசீம் ஆகியோர் முதுகெலும்பாக உள்ளனர். பேட்டிங்கில் கேப்டன் அசார் அலி, இளம் வீரர் பாபர் அசாம் உள்ளனர். 350 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டால் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு கடும் சவாலாக விளங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *