மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமலுக்கு வந்த நாள் ஆகஸ்ட் 02

1956 – உலகின் முதலாவது வணிக-ரீதியாக மின்சாரம் உற்பத்தி செய்யும் அணு மின் நிலையம் ஐக்கிய இராச்சியத்தில் கால்டர் ஹால் என்ற இடத்தில் நிறுவப்பட்டது.

1957 – மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமுலானது.

1962 – நாசா மரைனர் 2 விண்கலத்தை வீனசு கோளை நோக்கி ஏவியது.

1971 – ஆப்பிரிக்காவின் சாட் நாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி தோல்வியடைந்தது. சாட் அரசு எகிப்து மீது குற்றம் சாட்டியது.

1975 – போர்த்துக்கீசத் திமோரின் ஆளுநர் அதன் தலைநகர் டிலியைக் கிளர்ச்சியாளர்களிடம் கைவிட்டு அட்டாவுரோ தீவுக்குத் தப்பி ஓடினார்.

1979 – அயர்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவும் மற்றும் மூவரும் ஐரியக் குடியரசுப் படையின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். மேலுமொரு குண்டுவெடிப்பில் வட அயர்லாந்தில் 18 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர்.

1982 – துருக்கிய இராணுவ தூதர் அட்டில்லா அல்டிகாட் கனடாவின் ஒட்டாவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1915ம் ஆண்டில் 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கவென இத்தாக்குதலை நடத்தியதாக ஆர்மீனிய தீவிரவாதக் குழு இதற்கு உரிமை கோரியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!