தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 189 கோடிக்கு மது விற்பனை

சென்னை,

தமிழகம் முழுவதும் ஞாயிற்று கிழமைகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் வாரா வாரம் சனிக்கிழமை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் அரசு நடத்தும் மதுபானக்கடைகளிலும் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதும.

இந்நிலையில், இன்று முழு ஊரடங்கு நடைபெறுவதால், நேற்று (சனிக்கிழமை) மது விற்பனை அதிகமாக நடைபெற்றுள்ளது. அந்த வகையில் நேற்று மட்டும் தமிழகத்தில் 188 கோடியே 86 லட்சம் ரூபாய்க்கு மதுமானம் விற்பனை நடந்துள்ளது.

அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 44 கோடியே 85 லட்சத்துக்கும், திருச்சி மாவட்டத்தில் 42 கோடியே 72 லட்சத்துக்கும், சேலம் மாவட்டத்தில் 40 கோடியே 70 லட்சத்துக்கும், சென்னையில் 21 கோடியே 69 லட்சத்துக்கும், கோவையில் 38 கோடியே 90 லட்சத்துக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!