தமிழக ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரிசோதனைக்கு பின், ஆளுநர் மாளிகைக்கு திரும்பிய நிலையில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு கொரோனா தொற்றை உறுதி செய்துள்ளது.  முன்னதாக கடந்த வாரம், ராஜ் பவனில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!