வீரம் பட ஷூட்டிங்கின்போது நடைபெற்ற சம்பவம் குறித்து மனம் திறந்த சிறுத்தை சிவா

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் தொடர்ந்து நான்கு படங்களை இயக்கிய ஒரே இயக்குனர் என்ற பெருமையைப் பெற்ற இயக்குனர் சிறுத்தை சிவா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித்துக்கும் எனக்கும் ஒரு காட்சியை படமாக்குவதில் ரொம்ப வாக்குவாதம் ஏற்பட்டதாக ஒரு அதிர்ச்சியான தகவலை கூறியிருக்கிறார் . வீரம் படத்தில் இடம்பெறும் ரயில் சண்டைக் காட்சியை டூப் வைத்து எடுக்க முற்பட்டபோது, அதற்கு அஜித், சண்டை காட்சியில் நானே தான் நடிப்பேன் டூப் போட வேண்டாம், அடிபட்டால் படட்டுமே, நடிக்கும் வேலையை செய்ய வந்துவிட்டு இந்த ரிஸ்க் கூட எடுக்கலைன்னா எப்படி என்று சொல்லி விட்டாராம். இயக்குனர் சிவா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அந்தப் ரயில் சண்டைக் காட்சியில் நிஜமாகவே நடித்தாராம். டூப் ஏதும் போடாமல், தானாகவே முன்வந்து ரிஸ்க் எடுத்து அந்த சண்டைக்காட்சியை எடுத்து முடித்தோம் என அந்தப் பேட்டியில் சிவா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!