மனிதர்களை தொடர்ந்து கொரோனாவுக்கு செல்லநாய் பலி

வாஷிங்டன்,

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நாளுக்கு நாள் லட்சக்கணக்காக மக்கள் பாதிக்கப்படுவதும் பலியாவது தொடர்ந்து வருகிறது. ஆனால் இதுநாள்வரை கொரோனா வைரஸ் தொற்று, மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.

ஆனால் தற்போது அமெரிக்காவில் முதன்முதலாக நாய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாய் எஜமானர்கள், கூறுகையில்,“ எங்கள் நாய்க்கு ஏப்ரல் மத்தியில் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. தொடர்ந்து மூச்சு திணறல், சளியால் நாயின் உடல் நிலை சீராக பாதித்து வந்தது” என குறிப்பிட்டனர்.

கடந்த 11-ந் தேதி ரத்த வாந்தி எடுத்ததைத் தொடர்ந்து அந்த நாயை கருணைக்கொலை செய்து சாகடித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!