கொரோனா வைரஸ் பாதிப்பு : பிரேசில் பலி எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்தது

பிரேசிலியா,

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரேசில்  நேற்று முன்தினம் ஒரே நாளில் 57 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு தொற்று பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2610100-ஆக  அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 1,129 பேர் பலியானதை தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 91 ஆயிரத்து 263 ஆக உயர்ந்தது. மேலும் ஏறத்தாழ 18 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின்னர் கொரோனாவில் இருந்து மீண்டு இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!