2-வது ஒருநாள் போட்டி : இங்கிலாந்து பந்துவீச்சில் அயர்லாந்து திணறல்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் முண்ணிலை வகிக்கிறது.

இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. சற்றுமுன் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணியில்,  தொடக்க ஆட்டகரார்  பால் ஸ்டர்லிங் 12 ரன்களிலும், மற்றொரு தொடக்க ஆட்டகாரர் கிரீத் டெலானி 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

சற்று முன்வரை அயர்லாந்து அணி  13.1 ஓவர்களி்ல் 2 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் பில்பிர்னி 14 ரன்களுடனும், ஹேரி டேக்கர் 7 ரன்களுடளும் ஆடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!