எனக்கு தடை விதித்தது ஏன் என்று இன்னும் தெரியவில்லை : புலம்பும் முகமது அசாரூதீன்

கடந்த 2000-ம் ஆண்டில் மேட்ச் பிக்சங் குற்றச்சாட்டில் பிசிசிஐ-யால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டவர்  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன். ஆனால் இந்த தடையை எதிர்த்து இவர் நீதிமன்றத்தில் வழைக்கு தொடர்ந்து தடையில் இருந்து மீண்டார்.

இதனையடுத்து தற்போது ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியின்றி வெற்றி பெற்றுள்ள இவர்,  சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது என்றே தெரியவில்லை எனக் கூறி உள்ளார்.

இதுகுறித்து இவர் மேலும் கூறுகையில்,

நடந்த சம்பவங்கள் குறித்து நான் யார் மீதும் பழி சுமத்த விரும்பவில்லை. என்னை தடை செய்ததற்கான காரணங்கள் குறித்து எனக்கு உண்மையிலேயே தெரியாது. தடையில் இருந்து 12 ஆண்டுகள் கழித்து இதில் இருந்து விடுபட்டது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் 16 முதல் 17 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி உள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் கேப்டனாக செயல்பட்டுள்ளேன். இதைவிட அதிகமாக நான் என்ன கேட்க முடியும். கிரிக்கெட் பயணம் தனக்கு திருப்தி அளித்தது’’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!