இங்கிலாந்தை வீழ்த்த பந்துவீச்சாளர்கள் ரெடி : பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி அதிரடி

கொரோனா பாதிப்புக்கு இடையே இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இரு அணிகளும் போட்டிக்கு கடுமையாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில், இங்கிலாந்தை எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அணி கேப்டன் அசார் அலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அசார் அலி கூறுகையில்,

ஷாஹீன் ஷா மற்றும் நசீம் ஆகிய இருவரையும் அணியில் பெற்றிருப்பது அதிர்ஷ்டம். நாங்கள் இங்கிலாந்து மண்ணிற்கு ஏற்றபடி அனுபவம் பெற்றுள்ள முகமது அப்பாஸை பெற்றுள்ளது சிறப்பானது. சோஹைல் கான் அனுபவத்தை வீரர்களுடன் பகிர்ந்து கொள்வார். யாசீர் ஷாவின் அனுபவம் லெக்-ஸ்பின்னர். இளம் வீரர்களை வழிநடத்துவது முக்கியமானது.

பாகிஸ்தான் ஏற்கனவே இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடி உள்ளது. லாக்டவுன் காரணமாக வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. வேகப்பந்து வீச்சாளர்களின் வொர்க்லோடு சிறப்பாகவே உள்ளது’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!