ரோகித் சர்மா அபூர்வமான பேட்ஸ்மேன் : நியூசிலாந்து பந்துவீச்சாளர் லூக்கி பெர்குசன் கருத்து

இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அபூர்வமான பேட்ஸ்மேன் என்று நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் லூக்கி பெர்குசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்திய அணியின் ரோகித் சர்மா அபூர்வமான பேட்ஸ்மேன். அவருக்கு பந்து வீசுவது மிகவும் சிரமம். அவரை தொடக்கத்திலேயே வீழ்த்தவில்லை என்றால் பிறகு ரோகித் சர்மாவை வீழ்த்துவது கடினம். உலக தரத்திலான ஆட்டக்காரர். நான் ரோகித் சர்மாவின் மிகபெரிய ரசிகன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச அளவில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கும் பந்து வீசுவது மிகவும் கடினம்’’ என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து நூலிழையில் கோப்பையை தவறவிட்டாலும் நியூசிலாந்து அணிக்காக 21 விக்கெட்டுகளை எடுத்து, அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியவில் லூக்கி பெர்குசன் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!