நூதனமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் சிக்கின

இலங்கையில் கற்பிட்டி பள்ளிவாசல்துறை பகுதியில் சூட்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 லட்சம் ரூபா மதிப்புமிக்க 961 கிலோ கிராம் பீடி இலைகளை பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர். கற்பிட்டி காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.வி.பி.ஜயம்பதி பண்டாரவுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பிரகாரம் இந்த பிரதேசத்தில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே குறித்த பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பீடி இலைகளை மறைத்து வைத்திருந்த இடத்திலிருந்து சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!