இலங்கையில் ஆதரவாளர்களுக்கு இடையில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு தாக்குதல்

இலங்கையில் மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசத்தில் இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் அலி ஹாஸீர் மௌலானா மற்றும் ஹாபீஸ் நசீர் அகமட் ஆகிய இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் இடையே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒரு தரப்பினரின் வாகனம் ஒன்றின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், மற்றைய அணியினரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!