சேர்ந்து தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் வாங்கிய தாய் மற்றும் மகன்

மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் தாயும் , மகனும் சேர்ந்து பத்தாவது வகுப்பு பரீட்சை எழுதி சூப்பராக நல்ல மார்க் வாங்கி அசத்தியிருக்கிறார்கள் . அந்த ஊரைச் சேர்ந்த பேபி குரவ் என்பவரும் அவரது மகன் சதானந்தும் சேர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தனர். இதில் பேபி குரவுக்கு வயசு 36, மகன் சதானந்த்துக்கு 16 வயது. பேபி படிப்பை பாதியில் விட்டவர். இந்த நிலையில் தனது தாயையும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுமாறு சதானந்த் வலியுறுத்தி வந்தார். இதனால் மகனின் அன்புத் தொல்லையை ஏற்ற பேபி தானும் பத்தாம் வகுப்புக்கு விண்ணப்பித்தார். மகனுடன் சேர்ந்து படித்தார். மகனுக்குச் சொல்லித் தந்து, அவரும் படித்துக் கொண்டார். அம்மாவும் பிள்ளையும் சேர்ந்தே தேர்வும் எழுதியிருக்கின்றனர். இப்போது ரிசல்ட் வந்து விட்டது. இதில் அம்மா 64.40 சதவீத மதிப்பெண்களுடன் செம்மயாக தேர்ச்சி பெற்றுள்ளார். மகன் 73.20 சதவீத மதிப்பெண் பெற்று கலக்கியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!