நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு நீதி வேண்டும் என மோடிக்கு கோரிக்கை விடுத்த அவரது சகோதரி

கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு பாலிவுட் திரையுலகையே புரட்டி போட்டுள்ளது. இதில் நெப்போடிசம் பிரச்சனை, காதலி ரியா சக்கரவர்த்தி பிரச்சனை என பல குழப்பங்கள் மர்மமாகவே உள்ளன. ரியா சக்கரவர்த்தி வெளியிட்ட காணொளி வைரலாகி வரும் நிலையில், சுஷாந்த் சிங்கின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இதில் தன்னுடைய சகோதரரின் மறைவு பல கேள்விகளையும், குழப்பங்களையும் எழுப்பி உள்ள நிலையில், உரிய விசாரணை நடத்தி, நீதி வழங்க பிரதமர் மோடி வழிவகை செய்ய வேண்டும் என சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!