டெல்லியை பார்த்து பின்பற்றுமாறு அறிவுறுத்தும் மத்திய உள்துறை இணை அமைச்சர்

தற்போது கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் அனைத்து மாநிலங்களும் டெல்லியை முன்மாதிரியாக கொண்டு செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார் . டெல்லியில் உள்ள நிலவரத்தை நேரடியாக நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். அங்கு தற்போது குணமடைவோர் எண்ணிக்கை 84 சதவீதமாக உயர்ந்துள்ளது . டெல்லியில் மக்களும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கின்றனர் . தேவையில்லாமல் யாரும் வெளியில் செல்வதில்லை. அனைத்து மாநில மக்களும் இதைச் செய்ய முன்வந்தால் விரைவிலேயே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!