நமது வீட்டில் கடலைப்பருப்பு சுண்டல் எப்படி செய்யலாம்

இன்று கடலைப்பருப்பு சுண்டல் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
இதற்கு தேவைப்படும் பொருள்கள்:
கடலைப்பருப்பு – 200 கிராம் , உப்பு – தேவையான அளவு , தேங்காய் துருவல் – 2 மேஜைக்கரண்டி
தாளிக்க தேவைப்படும் பொருள்கள்:
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி, கடுகு – 1/2 தேக்கரண்டி , உளுந்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி,
மிளகாய் வத்தல் – 2, காயத்தூள் – 1/4 தேக்கரண்டி, கறிவேப்பிலை -சிறிது
இதனை செய்யும்முறை:
முதலில் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும் . பின்பு ஊறிய கடலைப்பருப்பு, தேவையான அளவு தண்ணீர், மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.  நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக்கொள்ளவும். தொடர்ந்து அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் மிளகாய் வத்தல், காயம், உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதன் பிறகு கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைத்து விடவும். பின்னர் எடுத்து வைத்து பரிமாறவும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!