சாதம் மற்றும் சப்பாத்தி போன்றவற்றுடன் எடுத்துக்கொள்ளத்தக்க பட்டர்பீன்ஸ் குழம்பு செய்வது எப்படி

இன்று பட்டர்பீன்ஸ் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இதற்கு தேவைப்படும் பொருள்கள் :
பட்டர் பீன்ஸ் – 100 கிராம், உப்பு – தேவையானஅளவு
அரைக்க தேவைப்படும் பொருள்கள் :
மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி, மல்லித் தூள் – 2 மேஜைக்கரண்டி, சீரகத் தூள் -1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 4 பல், பட்டை – ஒரு இன்ச் அளவு, கிராம்பு – 2, தேங்காய்துருவல் – 4 மேஜைக்கரண்டி, வெங்காயம் – 1/4, பழுத்த தக்காளி – 1
தாளிக்க தேவைப்படும் பொருள்கள் :
நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி, கடுகு – 1 தேக்கரண்டி, உளுந்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி, வெங்காயம் – 1/4, கறிவேப்பிலை – சிறிது
இதனை செய்யும் முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் பட்டர்பீன்ஸ், சிறிது உப்பு மற்றும் முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். பின்பு குக்கரில் வைத்தால் குழைந்து விடும்.
மிக்சியில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு போன்றவற்றையும் சேர்த்து லேசாக தண்ணீர் விட்டு நல்ல மையாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும். அதன் பின்னர் தேங்காய், வெங்காயம், தக்காளி சேர்த்து மிக்சியில் தனியாக அரைத்துக் கொள்ளவும். தொடர்ந்து அடுப்பில் கடாயை வைத்து என்னை ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். இதில் கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில்  வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறவும். பின்னர்  ஒரு நிமிடம் கழித்து வேக வைத்திருக்கும் பட்டர்பீன்ஸ், ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இதில் மசாலா வாடை மாறியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கொள்ளவும் . இதில் உப்பு சரி பார்த்துக் கொள்ளவும். இதில் தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். அதன் பிறகு  குழம்பு கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கி வைத்து விடவும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!