கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு கிடைத்த நூதன தண்டனை- கணவன் கைது

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் சாப்ரி ரன்வாஸ் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன் கணவனுக்குத் தெரியாமல் மற்றொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கணவனுக்குத் தெரியவர, மனைவியை கண்டித்துள்ளார்.

பின்னர் அந்த பெண்ணுக்கு கிராம மக்கள் முன்னிலையில் தண்டனை கொடுக்கப்பட்டது. அந்த பெண்ணின் தோளில் அவரது கணவரை அமர வைத்து ஊரை சுற்றி வரச் செய்தனர். அப்போது அவரை கிராம மக்கள் ஏளனமாக பேசி திட்டித் தீர்த்தனர்.

கணவனை சுமந்துகொண்டு நடக்க முடியாமல் நின்றபோது அவரை கம்புகளால் தாக்கினர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தும் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவனை கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!