வெளிநாடுகளில் வேலை செய்யும் நபர்களின் பணத்தை திருடிய கும்பல் சிக்கியது

தற்போது வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கை தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை மோசடி செய்த சந்தேக நபர்கள் ஐந்து பேரை ஞாயிறன்று கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சலுகை வட்டியில் கடன் வழங்குவதாக கூறி தொலைபேசி மூலம் வங்கிக் கணக்கின் விபரங்களை பெற்றுக்கொண்ட சந்தேகநபர்கள் வங்கிக் கணக்கிலிருந்து 500,000 ரூபாவை மோசடி செய்ததாக பெண் ஒருவரினால் கிருலப்பனை பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளில் பிடபெத்த, வெல்லம்பிட்டிய மற்றும் நாரஹேன்பிட்டிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 30, 39 மற்றும் 46 வயதுடைய சந்தேகநபர்கள் போலியான ஆவணங்கள் மற்றும் போலி ஓட்டுனர் அனுமதிப் பத்திரங்களை தயாரித்துள்ளது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!