தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள்

தமிழ் சினிமாவில் வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா. இந்த படம் சூப்பர் ஹிட்டானதையடுத்து அவர் திறமையான இயக்குனர் என்ற பெயர் எடுத்தார். அடுத்ததாக குஷி, நியூ, என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான மெர்சல் மற்றும் ஸ்பைடர் போன்ற படங்களில் மிரட்டும் வில்லனாக வந்து பலரையும் அவர் கதிகலங்க செய்தார். மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இறைவி திரைப்படத்தில் ஒரு பிரதான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகராக பலராலும் பாராட்டப்பட்டு விருதுகளை பெற்றிருந்தார் . எஸ்.ஜே சூர்யா இன்று தனது 52வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து அவருக்கு திரைப்பிரபலங்கள்,நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!